search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்ன திருப்பதி வெங்கட்ரமன கோவில் தேரோட்டம்
    X

    காருவள்ளி சின்ன திருப்பதி வெங்கட்ராமன கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் வடம் பிடித்து தேரை இழுத்த காட்சி. 

    சின்ன திருப்பதி வெங்கட்ரமன கோவில் தேரோட்டம்

    • ஓமலூர் அடுத்த காருவள்ளி சின்ன திருப்பதியில் வரலாற்று சிறப்புமிக்க பிரசன்ன வெங்கட்ரமன கோவில் உள்ளது.
    • தொடர்ந்து நேற்று தேரோட்டம் விழாவினை முன்னிட்டு காலை 10 மணி அளவில் ஸ்ரீ சுதர்சன ஹோமம், பூர்ணாஹூதி, சாமி ரதம் ஏறுதல் நடைபெற்றது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காருவள்ளி சின்ன திருப்பதியில் வரலாற்று சிறப்புமிக்க பிரசன்ன வெங்கட்ரமன கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாதத்தையொட்டி திருவிழா தொடங்கியது.

    நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் சாமி கல்யாணம் மற்றும் கருட சேவை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று தேரோட்டம் விழாவினை முன்னிட்டு காலை 10 மணி அளவில் ஸ்ரீ சுதர்சன ஹோமம், பூர்ணாஹூதி, சாமி ரதம் ஏறுதல் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4 மணி அளவில் தேரோட்ட விழா நடைபெற்றது.

    எம்.பி., எம்.எல்.ஏ. பங்கேற்பு

    விழாவில் சேலம் எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபன், ஓமலூர் எம்.எல்.ஏ. மணி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பல்பாக்கி கிருஷ்ணன், தமிழரசு, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சித்தேஸ்வரன், சுப்பிரமணியம், ராஜேந்திரன், அசோகன், கோவிந்தராஜ், மணிமுத்து, காடையாம்பட்டி ஒன்றிய குழு தலைவர் மாரியம்மாள், தி.மு.க. ஒன்றிய செயலாளர், அறிவழகன், ரவிச்சந்திரன், நகர தி.மு.க. செயலாளர் பிரபாகரன், தி.மு.க. மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அருள் உள்ளிட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் திருத்தேர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

    விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 7 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு சாமி திருவீதி உலா புறப்பாடு மற்றும் சத்தாபரணம், நையாண்டி மேளம் நடைபெற்றது. தேரோட்டம் விழாவிற்கான ஏற்பாட்டினை கோவில் அறங்காவல் குழு தலைவர் நைனா குமார் மற்றும் அறங்காவலர்கள், இந்து சமய அறநிலைத்துறையினர் மற்றும் கோவில் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×