என் மலர்
உள்ளூர் செய்திகள்
அரசு பஸ் மோதி தொழிலாளி பலி
- தங்கவேல் (55), தொழிலாளியான இவர் கடந்த 11-ந் தேதி இரவு இளம்பிள்ளையில் இருந்து சின்னப்பம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- சின்னப்பம் பட்டியில் இருந்து இளம்பிள்ளை நோக்கி வந்த அரசு பஸ் தங்கவேல் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
சேலம்:
சேலம் மாவட்டம் இடங்கணசாலை அருகே உள்ள கோணேரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (55), தொழிலாளியான இவர் கடந்த 11-ந் தேதி இரவு இளம்பிள்ளையில் இருந்து சின்னப்பம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சின்னப்பம் பட்டியில் இருந்து இளம்பிள்ளை நோக்கி வந்த அரசு பஸ் தங்கவேல் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தங்கவேல் தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த விபத்து குறித்து தங்கவேலுவின் மகன் கார்த்திக்கேயன் கொடுத்த புகாரின் பேரில் காகாபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.