search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூதாடிய 2 பேர் கைது
    X

    சூதாடிய 2 பேர் கைது

    • பெரியாண்டிச்சி அம்மன் கோவில் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • தாரமங்கலம் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    சேலம்:

    தாரமங்கலம் அருகே உள்ள பாரக்கல்லூர் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாரமங்கலம் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த இடத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த கரியாம்பட்டி பகுதியை சேர்ந்த சேட்டு (40), குப்புசாமி (41) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.200 பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×