என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
தாரமங்கலம் அருகே சொத்தில் பங்குகேட்டு மூதாட்டியை தாக்கிய உறவினர் மீது வழக்கு
Byமாலை மலர்25 Sept 2023 12:51 PM IST
- ராஜீவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பாப்பா (80). இவர் தனக்கு சொந்தமான இடத்தில் விவசாயம் செய்து கொண்டு பிழைப்பு நடத்தி வருகிறார்.
- நேற்று முன்தினம் மூதாட்டியிடம் சென்று தகராறு செய்து தாக்கியதில் மூதாட்டி பாப்பா காயமடைந்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் உள்ள கசுவரெட்டிப்பட்டி ராஜீவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பாப்பா (80). இவர் தனக்கு சொந்தமான இடத்தில் விவசாயம் செய்து கொண்டு பிழைப்பு நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது உறவினர் கோபால் (60) என்பவர் பாப்பாவிற்கு சொந்தமான நிலத்தில் பங்கு கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மூதாட்டியிடம் சென்று தகராறு செய்து தாக்கியதில் மூதாட்டி பாப்பா காயமடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாப்பா கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் கோபால் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X