என் மலர்
உள்ளூர் செய்திகள்
மயானத்திற்கு பாதை கேட்டு இறந்தவர் உடலுடன் போராட்டம்10 நாட்களில் நிரந்தர வழித்தடம் அமைக்க அதிகாரிகள் உறுதி
- குறிப்பிட்ட சமுதாயத்தி னருக்கு சொந்தமான மயானம் உப்பாரப்பட்டி பகுதியில் இருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் 7 சென்ட் பரப்பளவில் உள்ளது.
- இந்த நிலையில் மயானத்திற்கு செல்லும் வழி பாதையானது தங்களுக்கு சொந்தமான பட்டா நிலம் என்று கூறி ஒரு சிலர் அந்த வழியை மறைத்து கம்பி வேலி அமைத்துக் கொண்ட தாக கூறப்படுகிறது.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தார மங்கலம் அருகே உள்ள மானத்தால் ஊராட்சிக்கு உட்பட்ட உப்பாரப்பட்டி பகுதியில் சுமார் 250 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.
இந்தப் பகுதியில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு சொந்தமான மயானம் உப்பாரப்பட்டி பகுதியில் இருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் 7 சென்ட் பரப்பளவில் உள்ளது. இந்த மயானத்திற்கு செல்ல ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தை கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இப்ப குதியினர் பயன்படுத்தி வந்தனர்.
கம்பி வேலி
இந்த நிலையில் மயானத்திற்கு செல்லும் வழி பாதையானது தங்களுக்கு சொந்தமான பட்டா நிலம் என்று கூறி ஒரு சிலர் அந்த வழியை மறைத்து கம்பி வேலி அமைத்துக் கொண்ட தாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 ஆண்டாக ஒவ்வொரு முறை இறந்த வரின் உடலை எடுத்து செல்லும்போதும் இந்த வழித்தட பிரச்சினை தொடர்ந்து நடந்து வருகிறது.
இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்க ளுக்கு உரிய வழித்தடம் வேண்டும் என்று கலெக்டர், ஆர்.டி.ஓ., தாசில்தார் உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை மனு கொடுத்தனர். இது தொடர்பாக கடந்த 6 மாதங் களுக்கு முன்பு வரு வாய்த் துறையினரால் அமைதி பேச்சுவார்த்தையும் நடைபெற்று உள்ளது. இருப்பினும் இதற்கான நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை.
உடலை வைத்து போராட்டம்
இந்த சூழ்நிலையில் நேற்று உப்பாரப்பட்டி பகுதியில் பழனி (65) என்ற கூலித் தொழிலாளி உடல்நலக்குறை வால் இறந்தார். அவரது உடலை எடுத்துக் கொண்டு வழக்கம்போல் மயானத்திற்கு செல்லும் வழியில் சென்ற போது வேலி அமைத்த நபர்கள் எதிர்ப்பு தெரிவித்த தாக கூறப்படுகிறது. இதை யடுத்து பழனியின் உறவி னர்கள் உடலை நடுவழியில் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த தாரமங்கலம் வருவாய் ஆய்வாளர் முருகேசன், மானத்தால் கிராம நிர்வாக அலுவலர் திரவிய கண்ணன் மற்றும் தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
10 நாட்களில் வழித்தடம்
வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் மயானத்திற்கு செல்லும் வழித்தட பாதையை இன்னும் 10 நாட்களில் நிரந்தரமாக ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் 2 மணி நேரமாக நடத்திய போராட்டத்தை கைவிட்டு மீண்டும் உடலை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த மயானத்தில் அடக்கம் செய்தனர். மீண்டும் இது போன்ற ஒரு சம்பவம் நடை பெறுவதற்கு முன்பாக அதி காரிகள் உடனடியாக மயானத்திற்குச் செல் லும் மாற்று வழிபாதையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.