என் மலர்
உள்ளூர் செய்திகள்
சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் தனி நபர்கள் ஆதிக்கம்; பக்தர்கள் கண்டனம்
- இக்கோவிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை மூலம் தனியாக ஒரு உதவி ஆணையர் பணியமர்த்தப்பட்டு உள்ளார்.
- இக்கோயில், கடந்த சில ஆண்டுகளாகவே வழிபாடு, நிர்வாகம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.
சேலம்:
சேலம் சுகவனேசுவரர் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து செல்கின்றனர். பிரதோசம் மற்றும் விழா காலங்களில் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். இக்கோவிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை மூலம் தனியாக ஒரு உதவி ஆணையர் பணியமர்த்தப்பட்டு உள்ளார். 5 பேர் அறங்காவலர்களாக உள்ளனர். கோவிலினுள் நடைபெறும் நிகழ்வுகளை கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க மணியம் என்ற பொறுப்பாளரும் பணியில் உள்ளார். இக்கோயில், கடந்த சில ஆண்டுகளாகவே வழிபாடு, நிர்வாகம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.
சாமிகளுக்கு அணிவித்த மாலைகளை தனி நபர்கள் எடுத்து செல்வதும், பிரதோசம் மற்றும் விழா காலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு இடையூறாக தனி நபர்கள் மறைத்தபடி நிற்பதும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
கும்பாபிஷேகத்திற்கு முன்பு கோயிலின் நடை அடைக்கப்பட்ட பிறகும் தனி நபர்கள் சிலர் உள்ளே இருந்த வீடியோ, சிலைகளை சுமந்து சென்ற வீடியோ ஏற்கனவே வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் தற்போது இக்கோயிலில் கருவறை அருகாமையில் சிறப்பு தரிசன கட்டண பாதையில் நாற்காலி போட்டு, தனி நபர் ஒருவர் ஹாயாக உட்கார்ந்து இருப்பதும், அவரை கட்டண சீட்டு இல்லாமல் தரிசனத்திற்கு அனுப்பும் காட்சி பேஸ்புக், வாட்ஸ் அப், யூ-டியூப்பில் வைரலாகி கண்டனத்திற்கு உரியதாகி வருகிறது. பொதுவாக கோயில்களின் கருவறை, அர்த்த மண்டபம் அருகில் நாற்காலிகள் போடப்படாது என்பதால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்து உள்ளனர்.