என் மலர்
உள்ளூர் செய்திகள்
குரும்பபட்டி உயிரியல் பூங்காவில்நுழைவு கட்டணம் 50 ரூபாயாக உயர்வு
- காமிரா மற்றும் செல்போனுடன் செல்ல ரூ.20 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 50 ரூபாயாக உயர்வு
- 5 வயதிற்கு மேற்பட்ட 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 5 ரூபாயாக இருந்த கட்டணம் 10 ரூபாயாக உயர்வு
சேலம்
தமிழ்நாட்டில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, சேலம் குரும்பபட்டி உயிரியல் பூங்கா வேலூர் அமிர்தி உயிரியல் பூங்கா ஆகிய 4 உயிரியல் பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த உயிரியல் பூங்கா நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் வளர்ச்சி பணிகளுக்காகவும் உயிரியல் பூங்காக்களின் நுழைவு கட்டணம் மாற்றியமை க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.அதன்படி சேலம் குரும்பபட்டி உயிரியல் பூங்காவுக்கு காமிரா மற்றும் செல்போனுடன் செல்ல ரூ.20 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.5 வயதிற்கு மேற்பட்ட 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 5 ரூபாயாக இருந்த கட்டணம் 10 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.வீடியோ கேமரா பதிவு நிகழ்ச்சிகளுக்கு 100 ரூபாயாக இருந்த கட்டணம் 150 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
4 சக்கர சிறிய வாகனங்களுக்கு 25 ரூபாயாக இருந்த கட்டணம் 50 ரூபாயாகவும், பெரிய வாகனங்களுக்கு 25 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், இருசக்கர மற்றும் 3 சக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயிலிருந்து 20 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.பூங்காவுக்குள் பேட்டரி வாகனங்களில் செல்ல ரூ. 50 ரூபாய் கட்டணம் அதே அளவிலும், குழந்தைகளுக்கான 30 ரூபாய் கட்டணம் அதே அளவிலும் நீடிக்கிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை. மற்ற கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.