என் மலர்
உள்ளூர் செய்திகள்
சலூன் கடை தொழிலாளி மர்மசாவு
- சிவா, அழகாகவுண்டனூர் டாஸ்மாக் கடை அருகே இறந்து கிடப்பதாக மேச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ேசலம்:
சேலம் மாவட்டம் மேச்சேரி, அழகா கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் சிவா (வயது 40). இவர் அப்பகுதியில் உள்ள சலூன் கடையில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இரவு வெகு நேரமாகியும் வீட்டுக்கு கணவர் வராததால் அவரது மனைவி பதறி துடித்தார். இது பற்றி அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். பின்னர் மனைவி மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். இரவு நீண்ட நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மர்ம சாவு: இந்த நிலையில் சிவா, அழகாகவுண்டனூர் டாஸ்மாக் கடை அருகே இறந்து கிடப்பதாக மேச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு சிவா மர்மமான முறையில் இறந்திருப்பது தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி அவரது மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆஸ்பத்திரிக்கு சென்று கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார்.நண்பர்களிடம் விசாரணை: இந்த சம்பவம் குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். மேலும் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சிவாவுடன் சேர்ந்து மது குடித்த அவரது நண்பர்களை அழைத்து சிவா எப்படி இறந்தார்? என தனிப்படையினர் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர் இறந்ததற்கான காரணம் பற்றிய முழுவிபரங்களும் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.