என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![பழனியில் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம் பழனியில் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2023/11/18/1983248-palani-1.webp)
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்.
பழனியில் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- அதிகாரிகள் இப்பிரச்சினையில் தலையிட்டு உரிய நட வடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பழனி:
பழனி நகராட்சிக்கு ட்பட்ட பகுதியில் 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு போதிய சம்பளம் வழங்க ப்படவில்லை என்றும், குறிப்பிட்ட தேதியில் சம்பளம் கிடைப்பதில்லை என்றும், ஆண், பெண் தொழிலாளர்களுக்கு ஊதிய முரண்பாடு இருப்பதாகவும் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டது டன் தங்கள் கோரிக்கை களை நிறைவேற்றக்கோரி கோசங்களும் எழுப்பினர். ஏற்கனவே கடந்த 2 நாட்க ளுக்கு முன்பு போராட்ட த்தில் ஈடுபட்டபோது அவர்களின் கோரிக்கை களை நிைறவேற்றி தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
ஆனால் அவ்வாறு செய்யாததால் இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் தெரிவித்தனர். தூய்மை பணியாளர்களின் போரா ட்டத்தால் நகராட்சி க்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் தேக்கம் அடைந்து காண ப்பட்டது. எனவே அதிகாரி கள் இப்பிரச்சினையில் தலையிட்டு உரிய நட வடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.