என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![பாவூர்சத்திரத்தில் சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா பாவூர்சத்திரத்தில் சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா](https://media.maalaimalar.com/h-upload/2022/07/23/1734518-tenkasi-central-23-1.jpg)
மரக்கன்று நடும் விழாவில் கலந்து கொண்டவர்கள்.
பாவூர்சத்திரத்தில் சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார்.
- பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட ஆசிரியர் பாலகிருஷ்ணன் தொகுப்புரை ஆற்றினார்.
தென்காசி:
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் சார்பாக த. பி. சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார்.
அரிமா சங்கத்தின் உறுப்பினர்கள் அருணாசலம், முத்துச்சாமி மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சீதாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட ஆசிரியர் பாலகிருஷ்ணன் தொகுப்புரை ஆற்றினார். பள்ளி தலைமையாசிரியர் சுந்தரகுமார் வரவேற்றார். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் தலைவரும்,கண் தான மாவட்ட தலைவருமாகிய கே.ஆர்.பி.இளங்கோ மரக்கன்று நட்டு கண்தான விழிப்புணர்வு குறித்து உரையாற்றினர்.
உதவி தலைமை ஆசிரியை மாணிக்கசுந்தரி நன்றி கூறினார். விழா ஏற்பாட்டினை ஓவிய ஆசிரியர் தமிழ்ச்செல்வன் மற்றும் மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.