என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் சயனோற்சவ நிகழ்ச்சி
- அர்ச்சகர்கள் சார்பில் சயனோற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
- சிறப்பு அலங்காரத்தை. தொடர்ந்து பள்ளியறை பூஜை நடைபெற்றது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சந்திரசூடேஸ்வர சாமி கோவில் தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள், கடந்த 1-ந்தேதி தொடங்கியது.
தொடர்ந்து 14 நாட்கள் பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் சிகர நிகழ்ச்சிகளாக, கடந்த 7-ந் தேதி தேரோட்டம், 8-ந் தேதி பல்லக்கு உற்சவம் மற்றும் 9-ந் தேதி தெப்ப உற்சவம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 13-ந்தேதி வரை நாள்தோறும் இரவில், மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள், சார்பிலும், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பிலும்,வருவாய் அலுவலர்கள்,ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் பல்லக்கு உற்சவம் மற்றும் சாமி வீதி உலா நடத்தப்பட்டது.
விழாவின் நிறைவாக மலைக்கோவிலில், கோவில் செயல் அலுவலர், பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் சார்பில் சயனோற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, திரளான பக்தர்கள் சாமி க்கு, மஞ்சள், குங்குமம், மாலை, உள்ளிட்ட மங்கல பூஜைப் பொருட்களையும், வேட்டி, சட்டை, அம்மனுக்கு சேலை, ரவிக்கை துணி, வளையல்கள் மற்றும் வாசனை திரவியங்கள், பலவிதமான பூக்கள் மற்றும் இனிப்பு பலகாரங்கள், பாயாசம் உள்ளிட்ட உணவு வகைகளை படைத்து வேண்டுதல் நடத்தினர்.
சிறப்பு அலங்காரத்தை. தொடர்ந்து பள்ளியறை பூஜை நடைபெற்றது. சயன கோலத்தில் சாமி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் இதில், கோவில் செயல் அலுவர் சாமிதுரை மற்றும் சசிகுமார் உள்ளிட்ட பணியாளர்கள், தலைமை அர்ச்சகர் வாசீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.