என் மலர்
உள்ளூர் செய்திகள்
சாத்தான்குளம் யூனியனில் சமுதாய வளைகாப்பு விழாவில் 100 பெண்களுக்கு சீர்வரிசை பொருட்கள்
- சாத்தான்குளம் யூனியனில் ஊட்டச்சத்து மாதத்தையொட்டி சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
- மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பிரம்மசக்தி பங்கேற்று 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் யூனியனில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மாதத்தையொட்டி சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. சாத்தான்குளம் யூனியன் தலைவர் ஜெயபதி தலைமை தாங்கினார். சாத்தான்குளம் பேரூராட்சி தலைவர் ரெஜினி ஸ்டெல்லா மேரி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜோசப், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் வசந்தா வரவேற்றார். வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் காயத்திரி திட்டத்தை விளக்கி பேசினார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பிரம்மசக்தி பங்கேற்று 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி சீர் வரிசை பொருட்களை வழங்கினார்.
இதில் ஒன்றிய ஆணையாளர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கருப்பசாமி, வட்டார மருத்துவ அலுவலர் ஐலின்சுமதி, பேரூராட்சி செயல் அலுவலர் உஷா ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் ஊட்டச்சத்து பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குழந்தை வளர்ச்சி திட்ட வட்டார மேற்பார்வையாளர் புஷ்பா நன்றி கூறினார்.