என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![அனுமதி இல்லாமல் அதிக ஆட்களை ஏற்றிச்சென்ற வாகனங்கள் பறிமுதல் அனுமதி இல்லாமல் அதிக ஆட்களை ஏற்றிச்சென்ற வாகனங்கள் பறிமுதல்](https://media.maalaimalar.com/h-upload/2022/08/12/1745120-03.jpg)
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்.
அனுமதி இல்லாமல் அதிக ஆட்களை ஏற்றிச்சென்ற வாகனங்கள் பறிமுதல்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாண் குமார் ஏற்காட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.
- அப்போது சரக்கு வாகனத்தில் சட்டத்தை மீறி 45 நபர்களை ஏற்றிச் சென்ற 2 பிக்கப் வாகனங்களை பறிமுதல் செய்தார்.
ஏற்காடு:
கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்காட்டில் உள்ள வாடகை கார் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாண் குமார் மற்றும் ஏற்காடு போலீஸ் நிலையத்தில் சொந்த பயன்பாட்டு வாகனத்தை சட்டத்தை மீறி ஓட்டுவதாக புகார் அளித்தனர்.
அதனைதொடர்ந்து சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாண் குமார் ஏற்காட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது சரக்கு வாகனத்தில் சட்டத்தை மீறி 45 நபர்களை ஏற்றிச் சென்ற 2 பிக்கப் வாகனங்களை பறிமுதல் செய்தார்.
மேலும் விவசாயத்திற்கு பயன்படுத்தும் வாகனத்தில் 20 நபர்களை ஏற்றிச் சென்ற ஒரு பிக்கப் வாகனத்தையும், சரியான ஆவணங்கள் இல்லாமல் இயக்கி வந்த ஒரு ஜே.சி.பி வாகனத்தையும் பறிமுதல் செய்தார். அதிகமான பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற ஒரு வாகனத்தையும் பறிமுதல் செய்து அபராதம் விதித்தார். இந்த சோதனையின்போது அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.