என் மலர்
உள்ளூர் செய்திகள்

செங்கோட்டை நவநீத கிருஷ்ணன் கோவிலில் புஷ்பாஞ்சலி
- செங்கோட்டை ஆற்றங்கரை தெருவில் அமைந்துள்ள நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில் கோகுலாஷ்டமி முன்னிட்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
- விழாவானது கடந்த 4-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.
செங்கோட்டை:
செங்கோட்டை ஆற்றங்கரை தெருவில் அமைந்துள்ள நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில் கோகுலாஷ்டமி முன்னிட்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்். விழாவானது கடந்த 4-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.
விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் கும்பபூஜை, ஹோமம் அபிஷேகதீபாரதனையும், இரவு சிறப்பு தீபாரதனை மற்றும் அருள் பிரசாதமும் வழங்கப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியான கோகுலாஷ்டமி அன்று கும்பபூஜை ஜபம், ஹோமம். சிறப்பு அபிஷேகமும், தீபாரதனையும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு குழந்தைகளுக்கான விளையாட்டு பூஜைகள், பரதநாட்டியம் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கடைசி நாளன்று காலை ஹோமங்கள், நறுமண பொருட்களால் அம்பாளுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் தீபா ராதனை காண்பிக்க ப்பட்டது.இரவு அம்பாளுக்கு பல்வேறு வண்ணமயமான நறுமண பூக்களால் சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அவர்களுக்கு அருள்பிரசாதம் வழங்கப்பட்டது.