என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கொடி நினைவு தினம்- தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தினர் மரியாதை
    X

    செங்கொடி படத்திற்கு ஜான்பாண்டியன் மெழுகுவர்த்தி ஏந்தி மாலை அணிவித்த காட்சி.

    செங்கொடி நினைவு தினம்- தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தினர் மரியாதை

    • பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட ராஜீவ் காந்தி கொலை கைதிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி தீக்குளித்து உயிரிழந்த செங்கொடியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
    • தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பாளையில் உள்ள தென் தலைமை அலுவலகத்தில் இன்று மெழுகுவர்த்தி ஏந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நெல்லை:

    பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட ராஜீவ் காந்தி கொலை கைதிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி தீக்குளித்து உயிரிழந்த செங்கொடியின் நினைவு தினம் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பாளையில் உள்ள தென் தலைமை அலுவலகத்தில் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட செங்கொடியின் படத்துக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கண்மணிமாவீரன், மாநில துணை பொதுச் செயலாளர் நெல்லையப்பன், தலைமை நிலைய செயலாளர் கல்குறிச்சி சேகர், மாவட்ட இளைஞரணி செயலாளர் கிங் தேவேந்திரன், மாணவரணி செயலாளர் முத்துப்பாண்டி, பொருளாளர் முருகன், மகளிர் அணி செயலாளர் வசந்தி, நகர செயலாளர் மோகன், பகுதி செயலாளர் முருகேஷ், டேவிட் ராஜா, பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல் ராஜீவ் காந்தி கொலை கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×