என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
இ.சி.ஆரில் இரவு நேர விபத்தை தடுக்க பேரிகார்டுகளுக்கு சீரியல் வெளிச்சம்
By
மாலை மலர்29 March 2023 4:44 PM IST

- பேரிகார்டுகளால் ஏற்படும் வாகன விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி. பிரதீப் உத்தவிட்டார்.
மாமல்லபுரம்:
இ.சி.ஆர் சாலையில் இரவு நேரம் வேகத்தடைக்காக வைக்கப்படும் பேரிகார்டுகளால் ஏற்படும் வாகன விபத்துக்களை தடுக்க அப்பகுதிகளில் வெளிச்சத்தை ஏற்படுத்த செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி. பிரதீப் உத்தவிட்டார்.
இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எல்கை துவங்கும் பகுதியான திருவிடந்தை இ.சி.ஆரில், மாமல்லபுரம் போக்குவரத்து போலீசார் பேரிகார்டுகளில் சீரியல் விளக்குகள் அமைத்துள்ளனர். இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் அனைத்து வாகனங்கள் நின்று நிதானமாக செல்கிறது.
Next Story
×
X