search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் அருகே துணை சுகாதார நிலையம் முன்பு கழிவு நீரால் சீர்கேடு
    X

    ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு தேங்கி உள்ள கழிவு நீர்.

    திண்டுக்கல் அருகே துணை சுகாதார நிலையம் முன்பு கழிவு நீரால் சீர்கேடு

    • சுகாதார நிலையத்தில் கிராமப்புற சுகாதார செவிலியர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
    • சாலையில் கிழக்குப் பகுதியில் கால்வாய் வசதி இல்லாமல் கழிவு நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே கோவிலூரில் வேடசந்தூர் சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. துணை சுகாதார நிலையம் திண்டுக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் நிறுத்தம் பகுதியில் செயல்பட்டு வருகிறது.

    இந்த சுகாதார நிலையத்தில் கிராமப்புற சுகாதார செவிலியர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் - கரூர் இடையே 4 வழிச்சாலை விரிவாக்கப்பணிகளுக்காக கோவிலூர் பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலையில் கிழக்குப் பகுதியில் கால்வாய் வசதி இல்லாமல் கழிவு நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. துணை சுகாதார நிலையத்துக்கு வரும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளும் பாதிக்கப்படுகின்றனர்.

    சாலை விரிவாக்க பணிகளுக்காக கோவிலூர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் நிலம் கையகப்படுத்தும் பணிகளை தொடங்கியுள்ளனர். 2 நாட்களில் அதற்கான அளவீட்டு பணிகள் தொடங்கும். இதன் பிறகு இந்த சாலையை ஒட்டி கிழக்கு பகுதியில் கழிவு நீருக்கான கால்வாய் அமைக்கும் பணி ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி கூறினார்.

    Next Story
    ×