என் மலர்
உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு வாழ்க என்று முழக்கமிட்டு பொங்கல் வைத்த ஷாநவாஸ் எம்.எல்.ஏ.
தமிழ்நாடு வாழ்க என்று முழக்கமிட்டு பொங்கல் வைத்த ஷாநவாஸ் எம்.எல்.ஏ
- நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.
- முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. தனது குடும்பத்தினர் தொகுதி மக்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடினார்.
நாகப்பட்டினம்:
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.
முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. தனது குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொகுதி மக்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடினார்.
அப்போது தமிழ்நாடு வாழ்க என்று முழக்கம் எழுப்பப்பட்டது.
பின்னர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ கூறியதாவது,
இப்போது தமிழ்நாடு என்ற பெயரையே மாற்றத் துடிக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசின் இலச்சினை, தமிழ் ஆண்டு ஆகியவற்றை திட்டமிட்டு தவிர்க்கிறார்கள். தமிழர் திருநாள் அன்று 13000 பேர் எஸ்.பி.ஐ வங்கி தேர்வு எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு எம்.பி.க்கள் எவ்வளவோ போராடிய பிறகும் ஒன்றிய அரசு விடாப்பிடியாக தேர்வை நடத்துகிறது.
இப்படி ஓணம் பண்டிகையின் போதோ, தசரா பண்டிகையின் போதோ நடத்த முடியுமா. அப்படியிருக்க பொங்கல் நாளில் நடத்துகிறார்கள் என்றால் இது தமிழர் பண்பாட்டின் மீதும் தமிழ்நாட்டின் மீதும் நடத்தப்படுகிற தாக்குதலாகும். இதற்கு நாம் கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றார்.