என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கடலூரில் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம் கடலூரில் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2023/12/01/1989220-auto-velainirutham.webp)
கடலூர் பஸ் நிலைய பகுதியில் ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காட்சி.
கடலூரில் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஷேர் ஆட்டோ டிரைவர்கள் தங்கள் வருமானத்தை இழந்து, வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்படுகின்றனர்.
- ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்களும் அவதியடைந்தனர்.
கடலூர்:
கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு 50 ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாதாரண ஆட்டோக்களை (அபே ஆட்டோ) இயக்குபவர்களும், ஷேர் ஆட்டோக்கள் செல்லும் வழித்தடங்களிலே தங்கள் ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றி செல்கி ன்றனர். இதனால் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் தங்கள் வருமானத்தை இழந்து, வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்ப டவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட ஷேர் ஆட்டோ டிரை வர்கள் இன்று தங்கள் ஆட்டோ க்களை இயக்காமல், பஸ் நிலையம் அருகில் சாலையோரம் ஆட்டோ க்களை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகள் சம்பந்தமாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் மனு அளித்தனர். ஷேர் ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்களும் அவதியடைந்தனர். இந்த சம்பவத்தால் கடலூர் பஸ் நிலையப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.