என் மலர்
உள்ளூர் செய்திகள்
குடிபோதையில் சிக்கிய நபரிடம் ரூ.90 ஆயிரம் பணம்-கஞ்சா
- சிங்கம்புணரியில் குடிபோதையில் சிக்கிய நபரிடம் ரூ.90 ஆயிரம் பணம்-கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- அது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் போலீ சார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள சமத்துவபுரம் அருகே கோட்டை வேங்கைபட்டி ரோட்டில் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தார்.
அவரிடம் போலீசார் விசாரித்த போது மதுரை மாவட்டம் கொடுக்கம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த பாண்டி(வயது50) என்பதும், குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் போலீசாரின் கேள்விக்கு முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர்.அப்போது அவரிடம்
ரூ.90 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் 500 கிராம் கஞ்சா இருந்தது. அதுகுறித்து கேட்ட போது சரியாக தகவல் தெரிவிக்கவில்லை. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அவர் வைத்திருந்த பணம் மற்றும் கஞ்சா பற்றி போலீசார் விசாரித்தனர். குடிபோதையில் இருந்ததால் அவரிடம் இருந்து எந்த தகவலையும் போலீசாரால் பெற முடியவில்லை. கஞ்சா வுடன் சிக்கி இருப்பதால் கஞ்சா வியாபாரியாக இருக்கலாம் என்றும், அவர் வைத்திருந்த பணம் கஞ்சா விற்ற பணமாக இருக்கலாம் எனவும் தெரிகிறது.
அது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.