என் மலர்
உள்ளூர் செய்திகள்
கருமேனி ஆற்று தடுப்பணையில் மதகுகள் அமைக்க வேண்டும்- அமைச்சர் துரைமுருகனிடம் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. மனு
- கருமேனி ஆற்றில் சுப்பராயபுரம் அணைக்கட்டுக்கு இடையே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.
- அமைச்சர் துரைமுருகனை, ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து மதகுகள் அமைக்க கோரி மனு அளித்தார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் கருமேனி ஆற்றில் சுப்பராயபுரம் அணைக்கட்டுக்கு இடையே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.அதன் இரண்டு கரைகளும் பலப்படுத்தப்படாமலும் மதகுகள் இல்லாமலும் உள்ளதால் வெள்ள நேரங்களில் மழைநீர் அருகில் உள்ள வயல்களில் புகுந்து பயிர்களுக்கு மிகுந்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மழைக்காலங்களில் பாதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் தடுப்பணை கரைகளை பலப்படுத்த வேண்டும். மதகுகள் அமைக்க வேண்டும் என ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜிடம் முறையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகனை, ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து கருமேனி ஆற்றில் கட்டப்பட்டுள்ள சுப்பராயபுரம் தடுப்பணையின் இருகரைகளையும் பலப்படுத்தி மதகுகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார். அப்போது அவருடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர் உடனிருந்தார்.