என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லை வந்த தனிப்படையினர் முருகனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
தூத்துக்குடி முதியவரை கொலை செய்த மருமகன் கைது-நெல்லையில் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்

- மாமனாரின் சொத்து பத்திரங்களுடன் நெல்லையில் உள்ள உறவினர் வீட்டிற்கு முருகன் சென்றுள்ளதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.
- நெல்லை வந்த தனிப்படையினர் முருகனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தை சேர்ந்தவர் சிம்சோன் (வயது75). இவருக்கும், இவரது மகளின் கணவரான ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்களத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கு இடையே சொத்து தகராறு தொடர்பாக முன்விரோதம் உள்ளது.
முதியவர் கொலை
இந்நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் முருகன், சிம்சோனை கொலை செய்தார். மேலும் அவரது உடலை சாக்குமூட்டையில் வைத்து கிணற்றில் வீசி முயன்ற போது போலீசார் பார்த்துவிட்டனர். உடனே அவர் தப்பி சென்றுவிட்டார்.
இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் கூடுதல் எஸ்.பி. சந்தீஷ், ஏ.டி.எஸ்.பி. லயோலா மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் மாமனாரின் சொத்து பத்திரங்களுடன் நெல்லையில் உள்ள உறவினர் வீட்டிற்கு முருகன் சென்றுள்ளதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து நெல்லை சென்ற தனிப்படையினர் முருகனை மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.