என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் சிறப்பு திருப்பலி மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் சிறப்பு திருப்பலி](https://media.maalaimalar.com/h-upload/2023/04/09/1863050-a158nazir2090420232388mkpcmy.webp)
ஈஸ்டர் தினவழிபாட்டில் கலந்து கொண்ட இறைமக்கள். உள்படம் உயிர்த்தெழுந்த ஏசு கிறிஸ்து.
மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் சிறப்பு திருப்பலி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- புதிய நெருப்பு உண்டாக்கப்பட்டு திருப்பலியில் கலந்து கொண்ட அனைவரும் அந்த நெருப்பினை கொண்டு மெழுகுவர்த்தியை ஏற்றி பாஸ்கா திருவிழிப்பு ஜெயவழிபாடு நடத்தினர்.
- தேவாலயத்தில் ஆலயமணி ஒலிக்க கூடியிருந்த மக்கள் கரவொலி எழுப்பியும், வானவேடிக்கைகள் வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினர்.
திண்டுக்கல்:
கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலத்தை தொடர்ந்து ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாகவும், அவர் உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாகவும், கொண்டாடி வருகின்றனர். அதன்படி இன்று திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் 350 ஆண்டுகள் பழமைவாய்ந்த புனித வியாகுல அன்னை பேராலயத்தில் நள்ளிரவில் ஈஸ்டர் தின வழிபாடு நடைபெற்றது.
இரவு 11 மணிக்கு தொடங்கிய திருப்பலியில் புதிய நெருப்பு உண்டாக்கப்பட்டு திருப்பலியில் கலந்து கொண்ட அனைவரும் அந்த நெருப்பினை கொண்டு மெழுகுவர்த்தியை ஏற்றி பாஸ்கா திருவிழிப்பு ஜெயவழிபாடு நடத்தினர். அதனைதொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் ஆலயத்தின் நடுவே அமைக்கப்பட்டிருந்த பூமியின் நடுவே மரித்த ஏசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அப்போது தேவாலயத்தில் ஆலயமணி ஒலிக்க கூடியிருந்த மக்கள் கரவொலி எழுப்பியும், வானவேடிக்கைகள் வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினர்.
மேலும் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் தின வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். ஈஸ்டர் தின சிறப்பு திருப்பலியை மேட்டுப்பட்டி பங்குத்தந்தை செல்வராஜ் தலைமையில் உதவிபங்குத்தந்தை ஆரோக்கியம், அருட்தந்தையர்கள் அருமைசாமி, லாரன்ஸ், பீட்டர்ராஜ், ஆரோக்கியம், கப்புசின்சபை ஆகியோர் நிறைவேற்றினர். மேலும் அருட்சகோதரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நள்ளிரவில் ஈஸ்டர் தின சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.