என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
அய்யப்பனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
உத்தாணி அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜை
By
மாலை மலர்19 Dec 2022 3:07 PM IST

- அய்யப்பனுக்கு சிறப்பு தீபாராதனையும், பஜனையும் நடைபெற்றது.
- அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பாபநாசம்:
பாபநாசம் அருகே, உத்தாணி மெயின் ரோட்டில், முத்து முனியாண்டவர் திருக்கோயிலில் அமைந்துள்ள அய்யப்பன் கோயிலில், 28ஆம் ஆண்டை முன்னிட்டு அய்யப்பனுக்கு சிறப்பு தீபாராதனையும், பஜனையும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூர் அய்யப்ப பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி ஸ்ரீ அய்யப்பன் பாடல்களை பக்தர்கள் மேள தாளங்களுடன் பாடினார்கள்.
விழாவில் கலந்து கொண்ட உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் மற்றும் கிராமவாசிகள், பெண்கள் ஆகியோர் அய்யப்பன், முத்து முனியாண்டவரை தரிசனம் செய்தனர்.
அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்ப ட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உத்தாணியை சேர்ந்த கிராமவாசிகள் மற்றும் அய்யப்ப சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.
Next Story
×
X