என் மலர்
உள்ளூர் செய்திகள்
உம்மியம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு ரூ.1.60 லட்சம் மதிப்பில் விளையாட்டு சீருடைகள்
- மாணவர்கள் கல்வியில் மட்டுமில்லாமல் விளையாட்டு துறையிலும் சிறந்து விளங்கி நாட்டிற்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.
- விழாவிற்கான ஏற்பாடு களை பள்ளி தலைமை ஆசிரியர் நரசிம்மன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
கிருஷ்ணகிரி,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் தொப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட உம்மியம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் 340 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த மாணவ, மாணவிகளின் நலன் கருதி 2023-2024-ம் ஆண்டு கல்வி ஆண்டிற்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 462 மதிப்பில் விளையாட்டு சீருடைகள் மற்றும் ரூ.29 ஆயிரத்து 736 மதிப்பில் தினசரி நாட்டு குறிப்பேடுகள் என மொத்தம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான சீருடைகள், நாட்குறிப்பேடு களை ஐ.வி.டி.பி. நிறுவன தலைவரும், ராமன் மகசேசே விருது பெற்றவருமான குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.
விழாவிற்கு தருமபுரி வட்டார கல்வி அலுவலர்கள் சுமதி, பரமசிவம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் ஐ.வி.டி.பி. நிறுவன தலைவர் குழந்தை பிரான்சிஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில் மாணவர்கள் கல்வியில் மட்டுமில்லாமல் விளையாட்டு துறையிலும் சிறந்து விளங்கி நாட்டிற்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என தெரிவித்தனர்.
விழாவிற்கான ஏற்பாடு களை பள்ளி தலைமை ஆசிரியர் நரசிம்மன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சார்பில் இந்த பள்ளிக்கு கல்வி வளர்ச்சிக்காக ரூ.13 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.