என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாதனை படைத்த மாணவிகளை பள்ளி நிர்வாகத்தினர் பாரட்டினர்.
மாநில அளவிலான டென்னிகாய்ட் போட்டியில் ஸ்ரீ கலைவாணி பள்ளி சாதனை
- மாநில அளவிலான டென்னிகாய்ட் போட்டி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
- இரட்டையர் ஆட்டத்தில் எப்சிபா, தீபா ஆகியோர் மாநில அளவில் 3-ம் இடம் பிடித்தனர்.
சங்கரன்கோவில்:
தமிழக அரசு சார்பில் மாநில அளவிலான டென்னிகாய்ட் போட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இன்பன்ட் மேட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் 38 மாவட்டத்தில் உள்ள மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு பெண்கள் இளையோர் பிரிவில் இரட்டையர் ஆட்டத்தில் எப்சிபா, தீபா ஆகியோர் மாநில அளவில் 3-ம் இடம் பெற்று சாதனை படைத்தனர். மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகி பொன்னழகன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் ஊர் பொதுமக்கள் பாராட்டினார்கள்.
Next Story