என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் தேரோட்டம்
- பக்தர்கள் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
- ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே பல்லவராயன் பேட்டையில் புகழ்பெற்ற தென் திருப்பதி ஸ்ரீ வேங்கடாஜலபதி ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இந்த திருக்கோயிலின் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 19 -ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் பவனி நேற்று காலை துவங்கியது.
ஸ்ரீனிவாச பெருமாள் ராஜ அலங்காரத்தில் தாயாருடன் திருத்தேருக்கு எழுந்தருளி னார் அங்கு மகாதீபாரதனை செய்யப்பட்டது.
பக்தர்கள், பொதுமக்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
அப்போது கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பல்லவராயன் பேட்டையில் துவங்கிய தேர் வீதி உலா திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயில் நான்கு ரத வீதிகள் வழியே நடைபெற்றது. வீடுகள் மட்டும் வணிக நிறுவனங்க ளில் வாசலில் பக்தர்கள் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்.
இதில் ஏராள மான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இந்நிகழ்ச்சியில் திரு இந்தளூர் பட்டர் சுவாமிகள் மற்றும் விழா குழுவினர்கள் சந்தானகிருஷ்ணன், மகாதேவன், ரெங்கநாதன், லெட்சுமி நாராயணன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
நாளை மாலை மணியளவில் பல்லவராயன் பேட்டை திருகுளத்தில் சுவாமி தெப்ப திருவிழா நடைபெற உள்ளது.