என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா](https://media.maalaimalar.com/h-upload/2023/06/13/1897723-untitled-1.webp)
புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இவ்விழாவின் இறுதிநாளான நேற்று முன்தினம் இரவு திருத்தேர் பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது.
- முன்னதாக, ஆலயத்தில் தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் சென்னை சாலை சுண்டம்பட்டி புதுவை நகரில் உள்ள கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலய 53-ம் ஆண்டு தேர்த் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த 4-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கிய இந்த தேர் திருவிழாவில், நாள்தோறும் ஆலயத்தின் பங்கு தந்தையர்களால், நவநாள் ஜெபங்களுடன் சிறப்பு திருப்பலி நடைபெற்று வந்தன. இவ்விழாவின் இறுதிநாளான நேற்று முன்தினம் இரவு திருத்தேர் பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, ஆலயத்தில் தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
பின்னர் புனிதர் அந்தோணியாரின் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி நடைபெற்றது. வாணவேடிக்கையுடன் தொடங்கிய தேர் பவனியை பங்குத்தந்தை ஜார்ஜ், புனித நீர் தெளித்து, மந்திரித்து தொடங்கி வைத்தார். இதில், சுண்டம்பட்டி, கந்திகுப்பம், புதுவை நகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக வந்த இந்த தேரின் மீது பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை தூவி தங்களது நேர்த்திகடனை செலுத்தினார்கள்.