என் மலர்
உள்ளூர் செய்திகள்
புதியம்புத்தூரில் தேங்கிய மழைநீர் அகற்றும் பணி
- தட்டாபாரை ரோட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்குள் மழைநீர் தேங்கி விடுகிறது.
- இதனை புதியம்புத்தூர் பஞ்சாயத்து நிர்வாகம் கவனத்தில் கொண்டு உடனடியாக ஜே.சி.பி. எந்திரம் கொண்டு தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியை மேற்கொண்டனர்.
புதியம்புத்தூர்:
புதியம்புத்தூரில் தினசரி மாலையில் மழை பெய்து வருகிறது. இதனால் தட்டாபாரை ரோட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்குள் மழைநீர் தேங்கி விடுகிறது. இதனால் அருகில் உள்ள போலீஸ் நிலையம், பஞ்சாயத்து அலுவலகம், கால்நடை மருத்துவமனைக்கு பொதுமக்கள் செல்ல சிரமப்படுகின்றனர். இதனை புதியம்புத்தூர் பஞ்சாயத்து நிர்வாகம் கவனத்தில் கொண்டு உடனடியாக ஜே.சி.பி. எந்திரம் கொண்டு தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியை மேற்கொண்டனர். இந்த பணியினை ஊராட்சி மன்ற தலைவி பழனிச்செல்வி மற்றும் துணைத் தலைவி ஜெயா ஆகியோர் உடன் இருந்து பார்வையிட்டனர்.
மேலும் அருகில் உள்ள கசிநீர் குட்டத்தில் உள்ள மழை நீரையும் ஓடை வழியாக செல்ல ஏற்பாடு செய்தனர். யூனியன் சேர்மன் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகளுடன் பணிகள் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டார். இந்நிலையில் நேற்று பெய்த மழையில் அங்கு மீண்டும் மழை நீர் தேங்கிவிட்டது. இந்த வளாகத்திற்குள் மழை நீர் தேங்காமல் இருக்க நிரந்தரமாக எஸ்.கைலாசபுரம் சாலையில் செட்டியூரணி விலக்கு அருகில் இருந்து சாலையின் வடக்கு ஓரத்தில் சுமார்200 மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைத்து அருகில் உள்ள ஓடை வழியாக மழை நீரை திருப்பி விட வேண்டும் அவ்வாறு செய்தால் இப்பகுதியில் மழை நீர் நிரந்தரமாக தேங்காமல் இருக்கும் என அப்பகுதி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.