என் மலர்
உள்ளூர் செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் -கலெக்டர் ஆகாஷ் அறிவிப்பு

- மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு scholarship.tn.gov.in என்ற முகவரியில் பதிவு செய்யப்பட வேண்டும்.
- உதவித்தொகை திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில், 2022-2023-ம் கல்வி ஆண்டிற்கான அரசு,அரசு நிதியுதவி மற்றும் சுய நிதி பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணவ-மாணவிகளுக்கான தமிழ்நாடு அரசு மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பெண்கல்வி ஊக்குவிப்பு சிறப்பு திட்டத்தின் கீழ் 3-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.500, 6-ம் வகுப்பில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.1000, 7 மற்றும் 8-ம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.1500 வழங்கப்படுகிறது.
மேலும் சுகாதார தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை ரூ.3000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பெற்றோர்,பாதுகாவலர் ஆண்டு வருமானம் உச்ச வரம்பு இல்லை.
ஒன்றிய அரசின் ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 9-ம் மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தாங்கள் பயிலும் பள்ளியின் மூலம் இணையவழியில் (scholarship.tn.gov.in) என்ற முகவரியில் பதிவு செய்யப்பட வேண்டும். பெற்றோர்,பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 10-ம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவ-மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளியின் மூலம் இணையவழியில் (scholarship.tn.gov.in)என்ற முகவரியில் பதிவு செய்யப்பட வேண்டும். பெற்றோர்,பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சம் ஆகும். மேற்காணும் திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.