search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதிச்சநல்லூரில் சைட் மியூசியத்தை காண  குவியும் மாணவர்கள்-  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் பார்வையிட்டனர்
    X

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் அகழாய்வு இடத்தை பார்வையிட்ட போது எடுத்தபடம்.

    ஆதிச்சநல்லூரில் சைட் மியூசியத்தை காண குவியும் மாணவர்கள்- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் பார்வையிட்டனர்

    • நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப்படிப்பு மாணவ- மாணவிகளுக்கு கடந்த 5 நாட்கள் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.
    • இவர்கள் அனைவரும் ஆதிச்சநல்லூருக்கு கல்விச் சுற்றுலாவாக வருகை தந்தனர்.

    செய்துங்கநல்லூர்:

    இந்தியாவிலேயே முதல் முதலாக வெளிநாட்டில் உள்ளது போல் ஆதிச்ச நல்லூரில், உள்ளது உள்ளபடி அகழாய்வு செய்த இடத்தினை அப்படியே வைத்து அதன் மீது கண்ணாடி பேழை அமைத்து அதன் மேலிருந்து பொதுமக்கள் பார்வையிடும் வகையில் சைட் மியூசியம் அமைக்கப்ப ட்டுள்ளது.

    இதனால் ஆதிச்சநல்லூரை பார்வையிட வேண்டும் என மாணவர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டள்ளது. இதற்கிடையில் கடந்த 5-ந் தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சைட் மியூசியத்தினை திறந்து வைத்தார்.

    இந்த நிலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப் படிப்பு மாணவ- மாணவிகளுக்கு கடந்த 5 நாட்கள் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் 450 மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட னர். இவர்கள் அனைவரும் ஆதிச்சநல்லூருக்கு கல்விச் சுற்றுலாவாக வருகை தந்தனர். இவர்களுடன் பல்கலைக ழகத்தின் முதலாம் ஆண்டு முதுகலை தொல்லியல் துறை மாணவ- மாணவிகளும் கலந்து கொண்டனர். இவர்களுக்கு சமூகரெங்கபுரத்தில் இயங்கி வரும் பனைமரம் நிதி நுட்ப தனியார் நிறுவனமும், பாளை சாரதா கல்லூரியும் போக்கு வரத்து ஏற்பாடுகளுக்காக பஸ்களை ஏற்பாடு செய்திருந்த னர்.

    ஆதிச்சநல்லூரில் பி சைட் எனப்படும் இடத்திற்கு அவர்கள் வருகை தந்தனர். கண்ணாடி பேழை அமைக்கும் பணியின் நிறைவு பணி நடை பெறுவதால், அவ்விடத்தினை பார்வையிட முடியவில்லை. ஆகவே அருகில் உள்ள குழியில் உள்ள முதுமக்கள் தாழிகளை அவர்கள் பார்வையிட்டனர்.

    இந்த சுற்றுலாவை ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப்படிப்பு இயக்குநர் பேராசிரியர் மருதுகுட்டி மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்க ழகத்தின் தொல்லியல் துறைத் தலைவரும் (பொறுப்பு), உயிர் தொழில்நுட்பத்துறை பேராசிரியருமான சுதாகர் விளக்கம் அளித்தனர். அதன் பின் மாணவர்கள் 5 ஆயிரம் பழமையான பொருநை நதிக்கரை நாகரீகத்தினை கண்டுகளித்தனர்.

    Next Story
    ×