search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் கதர் துணியில் பாரதியாரின் ஓவியங்களை வரைந்த மாணவ- மாணவிகள்
    X

    கதர் துணியில் பாரதியாரின் ஓவியங்களை வரைந்த மாணவ- மாணவிகளை படத்தில் காணலாம்.

    நெல்லையில் கதர் துணியில் பாரதியாரின் ஓவியங்களை வரைந்த மாணவ- மாணவிகள்

    • முண்டாசுக் கவிஞன் பாரதியின் 26 ஓவியங்களை கதர் துணியில் வரையும் நிகழ்ச்சி எல்.ஐ.சி. கோட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் நெல்லை கோட்டத்தின் பொதுச்செயலாளர் பொன்னையா தலைமை தாங்கினார்.

    நெல்லை:

    அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 26-வது அகில இந்திய மாநாட்டினை முன்னிட்டு, பாரதி பிறந்த நாளான இன்று நெல்லை கோட்ட காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் மற்றும் நெல்லை சிவராம் கலைக்கூடம் இணைந்து நடத்திய, முண்டாசுக் கவிஞன் பாரதியின் 26 ஓவியங்களை கதர் துணியில் வரையும் நிகழ்ச்சி எல்.ஐ.சி. கோட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் நெல்லை கோட்டத்தின் பொதுச்செயலாளர் பொன்னையா தலைமை தாங்கினார். தென் மண்டலம் காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் சுவாமிநாதன் வாழ்த்துரை வழங்கினார். பாரதி ஓவியம் வரையும் நிகழ்ச்சியை சிவராம் கலைக்கூடத்தின் ஓவிய ஆசிரியர் கணேசன் ஒருங்கிணைத்தார்.

    நிகழ்ச்சியில் நெல்லை கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் கோட்டப் பொறுப்பாளர்கள் மதுபால், கிருஷ்ணன், பட்டன், செண்பகம், மகாதேவன், நரேஷ் கண்ணா, சீனிவாசன், மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×