என் மலர்
உள்ளூர் செய்திகள்
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை குளிர்வித்த திடீர் மழை
- வார விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா வாகனங்கள் கொடைக்கானல் மலை ச்சாலையில் அணிவகுத்து சென்றன.
- திடீரென சாரலாக பெய்ய தொடங்கிய மழை அரை மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி யான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. அவ்வப்போது சாரல் மழை பெய்த நிலையில் இதமான வெயிலுடன் குளுகுளு சீசன் நிலவி வருவதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்தனர்.
வார விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா வாகனங்கள் மலை ச்சாலையில் அணிவகுத்து சென்றன. கடந்த சில நாட்களாகவே மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.
இந்த நிலையில் நேற்று திடீரென சாரலாக பெய்ய தொடங்கிய மழை அரை மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. அதனுடன் டார்ச் லைட் அடித்தது போல் வெயிலும் அடித்ததால் சுற்றுலா பயணிகள் இதனை ரசித்தனர். மேலும் பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகளும் மழையில் நனைந்தபடி வீடு திரும்பினர். அவ்வப்போது மழை பெய்து இதமான சீதோசனம் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழையில் குடை பிடித்தபடியே சுற்றுலா இடங்களை கண்டு ரசித்தனர்.
இதனால் மோயர்பாய்ண்ட், குணாகுகை, கோக்கர்வாக், பிரையண்ட் பூங்கா, பைன்பாரஸ்ட், ரோஜாபூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.