என் மலர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் செயின் பறிக்கும் முயற்சியில் பெண்ணின் முடியை பிடித்து இழுத்த மர்மநபர்கள்
- மர்மநபர்கள் ராஜலட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் செயினை பறிக்க முயன்றனர்.
- கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
கோவை,
கோவை சோமனூர் அருகே உள்ள செந்தில் நகரை சேர்ந்தவர் சண்முகம். விசைதறி தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 45).
சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் மொபட்டில் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு சிகிச்சை முடிந்ததும் கணவன்-மனைவி இருவரும் மொபட்டில் மீண்டும் வீட்டுக்கு திரும்பினர்.
மொபட் கோவை- அவினாசி ரோட்டில் கருமத்தம்பட்டி அருகே மேம்பாலத்தில் சென்று கொண்டு இருந்தது. அப்போது இவர்களை மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் பின் தொடர்ந்து வந்தனர்.
அவர்கள் ராஜலட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் செயினை பறிக்க முயன்றனர். அப்போது அவரது முடியை பிடித்து மர்மநபர்கள் இழுத்தனர். இதில் கணவன்-மனைவி இருவரும் மொபட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதனை பார்த்த மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
மொபட்டில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்த கணவன் -மனைவி இருவரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் செயின் பறிக்கும் முயற்சியில் அவரின் முடியை பிடித்து கீழே தள்ளிய மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.