என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
சேலம் மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர் பணி இடை நீக்கம்
Byமாலை மலர்9 May 2023 3:13 PM IST
- சேலம் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சித்தேஸ்வரன். இவர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டதாக தெரிகிறது.
- இதனால் அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம்:
சேலம் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சித்தேஸ்வரன். இவர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஆணையாளர் கிறிஸ்துராஜ் பிறப்பித்துள்ளார்.
இது குறித்து ஆணையாளர் கிறிஸ்துராஜிடம் கேட்ட போது சுகாதார ஆய்வாளர் மீது பல்வேறு புகார்கள் வந்தது. அதன்பேரில் அலுவலர்கள் மூலம் அவரை பற்றி முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அறிக்கையின்படி சுகாதார ஆய்வாளர் சித்தேஸ்வரன் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்றார்.
சஸ்பெண்டு செய்யப்பட்ட சித்தேஸ்வரன் மாநகராட்சி தூய்மைப்பாணியாளர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதனால் மனம் உடைந்த அந்த பெண் தற்கொலைக்கு முயன்ரதாகவும் தெரிகிறது, இதன் காரணமாகவே அவர் சஸ்பெண்டு செய்யப் பட்டதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
Next Story
×
X