என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![ஓசூரில் வட்டக் கிளை பேரவை கூட்டம் ஓசூரில் வட்டக் கிளை பேரவை கூட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2023/08/04/1926936-img20230803165313.webp)
பேரவை கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
ஓசூரில் வட்டக் கிளை பேரவை கூட்டம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கூட்டத்திற்கு, வட்ட தலைவர் சிவா தலைமை தாங்கினார்.
- அரசு ஊழியர்கள் எதிர்கொள்ளும் சவால்களும், தீர்வுகளும்” என்ற தலைப்பில் பேசினர்.
ஓசூர்,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஓசூர் வட்டக் கிளை பேரவை கூட்டம், தெப்பக்குளம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு, வட்ட தலைவர் சிவா தலைமை தாங்கினார்.
இதில் இணை செயலாளர் சுரேஷ்குமார் வரவேற்றார். வட்ட செயலாளர் திம்மராஜ், செயலாளர் அறிக்கையையும், பொருளாளர் அருண்குமார் வரவு - செலவு அறிக்கையையும் வாசித்தனர்.
மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட தலைவர் சந்திரன் ஆகியோர் பேசினர்.
சங்கத்தின் முன்னாள் மாநில தனிக்கையாளர் நடராஜன், "அரசு ஊழியர்கள் எதிர்கொள்ளும் சவால்களும், தீர்வுகளும்" என்ற தலைப்பில் பேசினர்.
இதில் பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், வட்ட துணைத்தலைவர் வெங்கடேசன் நன்றி கூறினார்.