என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் தர்ணா போராட்டம் கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் தர்ணா போராட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2023/10/21/1970170-dsc0262.webp)
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் தர்ணா போராட்டம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
- ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வைய பொறியா ளர் அலுவலகம் முன்பு, மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்காக, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. கிருஷ்ணகிரி மத்திய அமைப்பு திட்ட தலைவர் துரை தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் சாமுடி, ராஜேந்திரன், சிவசங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் வாசு தேவன், திட்ட செயலாளர் கருணாநிதி, ஓய்வுபெற்றோர் நல அமைப்பு செயலாளர் முனிரத்தினம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில், திட்ட பொரு ளாளர் முனிசாமி நன்றி கூறினார்.
இந்த போராட்டத்தின் போது, தினக்கூலி இ-டெ ண்டரை கைவிட வேண்டும். மின்வாரியத்தில் 15 ஆண்டுகளாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளியை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்திட வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங் கிட வேண்டும்.
ஒப்பந்த ஊழியர்களுக்கு வி பத்து காப்பீடு உறுதிபடுத்திட வேண்டும். ஒப்பந்த ஊழி யர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையினை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.