என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சமூக சேவகருக்கான விருது- கலெக்டர் தகவல்
- விருது பெற விரும்பும் சமூக சேவகர் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
- சமூக சேவை நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்துவரும் நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், மகளிர் நலனுக்காக சிறந்த முறையில் சேவையாற்றி வரும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவகருக்கு 2022 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தமிழக முதலமைச்சர் அவர்களால் விருதுகள் வழங்கப்பட உள்ளது.
மேற்படி விருது பெற விரும்பும் சமூக சேவகர் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவராகவும், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மகளிர் நலனுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வருபவராகவும் இருத்தல் வேண்டும். சமூக சேவை நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்துவரும் நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.
மேற்படி விருதினை பெறுவதற்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் மகளிர் நலனுக்காக சிறந்த முறையில் சேவையாற்றி வரும் தகுதியான சமூக சேவை நிறுவனம் மற்றும் சமூக சேவை புரிந்து வரும் சமூக சேவகர்கள் https://awards.tn.gov.in என்கிற தமிழ்நாடு அரசின் விருதுகள் இணையதளத்தில் மேற்படி விருதுக்கு விண்ணப்பித்து அதன் நகலுடன் செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு மேற்படி விருதுக்கான விண்ணப்ப படிவத்தினை பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் சமூக சேவகர் இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெற்ற குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்று மற்றும் சேவை பற்றி ஆவணங்களை புகைப்படத்துடன், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தனித்தனியாக பூர்த்தி செய்து 30.06.2022 அன்று மாலை 5. மணிக்குள் "மாவட்ட சமூக நல அலுவலகம், (சிஆர்சி) குறுவள மையக் கட்டிடம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகம், 85 ஆலப்பாக்கம், செங்கல்பட்டு - 603 003" என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்