என் மலர்
உள்ளூர் செய்திகள்
கைதான மீனவர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவிய விஜய் வசந்த்
- விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என விஜய் வசந்தை சந்தித்து குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.
- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மீனவர் அணி தலைவர் ஜோர்தான் உடனிருந்தார்.
குளச்சல் துறைமுகத் தெருவில் வசிக்கும் ஆண்டனி தாஸ் அல்போன்ஸ் மீன்பிடி தொழில் செய்ய குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து மேலும் ஆறு மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்று பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அவரை விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தை சந்தித்து குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்ற விஜய் வசந்த் மீனவர்களை விடுவிக்க ஆவன செய்வதாக உறுதி அளித்தார்.
மேலும் அவர்கள் குழந்தைகளின் கல்வி தேவைக்கு நிதியுதவி தேவை என்பதை அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நிதியுதவி அளித்தார். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மீனவர் அணி தலைவர் ஜோர்தான் உடனிருந்தார்.
இதனிடையே பிள்ளைத்தோப்பு கடற்கரையில் விளையாடி கொண்டிருந்த போது திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த சஜிதாவின் பெற்றோரான முத்துக்குமார்- மீனாவை அவர்களின் இல்லத்திற்கு சென்று சந்தித்து விஜய் வசந்த் ஆறுதல் கூறினார்.