search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாமல்லபுரத்தில் தடை செய்யப்பட்ட 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
    X

    மாமல்லபுரத்தில் தடை செய்யப்பட்ட 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

    • சாலையோர கடைகள், தள்ளு வண்டிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்ககூடாது.
    • பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள் என 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    மாமல்லபுரம்:

    சென்னையில் 6 நாட்கள் நடைபெறும் ஜி20 மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் இன்று(புதன்கிழமை) மற்றும் 28-ந்தேதி மாமல்லபுரம் வருகை தரும் அவர்கள் அங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்க்க உள்ளனர்.

    இந்த நிலையில் மாமல்லபுரத்தில் ஓட்டல்கள், வணிக வளாகங்கள், சாலையோர கடைகள், தள்ளு வண்டிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்ககூடாது என்றும், அதை மீறி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பேரூராட்சிகளின் இணை இயக்குனர் உமா மகேஸ்வரி பேரூராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து. நேற்று மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் தலைமையில் பேரூராட்சி சுகாதார பிரிவு ஊழியர்கள் 2 குழுக்களாக பிரிந்து சென்று ஓட்டல்கள், வணிக வளாகங்கள், சாலையோர கடைகள், தள்ளுவண்டி கடைகள் என பல கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள் என 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.2 ஆயிரத்து 400 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    Next Story
    ×