என் மலர்
உள்ளூர் செய்திகள்
மாங்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை திருட்டு
- வழியாக ரோந்து பணியில் இருந்த மாங்காடு போலீசார் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டனர்.
- வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த சிக்கராயபுரம், சிவன் தாங்கல், தில்லை நடராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 29). வளசரவாக்கத்தில் உள்ள தனியார் கார் ஷோரூமில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் திருச்சியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்று விட்டார்.
இந்த நிலையில் அந்த வழியாக ரோந்து பணியில் இருந்த மாங்காடு போலீசார் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டனர். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இது குறித்து வீட்டின் உரிமையாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது வீட்டில் 18 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சம் திருடப்பட்டது போலீசாருக்கு தெரியவந்தது.
இது பற்றி மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர். வீட்டின் உரிமையாளர் வந்த பிறகே வேறு என்ன பொருட்கள் எல்லாம் திருட்டு போனது என்பது தெரியவரும். அந்த பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.