என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![மேட்டூர் அணை 16 கண் பாலம் தண்ணீர் இல்லாமல் வறண்டது மேட்டூர் அணை 16 கண் பாலம் தண்ணீர் இல்லாமல் வறண்டது](https://media.maalaimalar.com/h-upload/2023/08/03/1926467-metturdam.webp)
மேட்டூர் அணை 16 கண் பாலம் தண்ணீர் இல்லாமல் வறண்டது
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
- பாசன பகுதிக்கு ஏற்றவாறு நீர் திறப்பு அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை மூலம் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இது தவிர இந்த அணையின் மூலம் பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குடிநீர், பாசனத்துக்கு முக்கியமாக விளங்கி வரும் மேட்டூர் அணைக்கு ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை பொழிந்து நீர்வரத்து அதிகரிக்கும்.
அந்த காலகட்டங்களில் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். மேலும் உபரிநீர் 16 கண் பாலம் வழியாக திறந்து விடப்படும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை கை கொடுக்காததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது.
அதேநேரம் மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் நீர்மட்டமும் குறைந்து வருகிறது. பாசன பகுதிக்கு ஏற்றவாறு நீர் திறப்பு அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 61.26 அடியாக இருந்தது. அணைக்கு வெறும் 154 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. மேலும் பாசனத்துக்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நேற்று மாலை முதல் 12ஆயிரத்தில் இருந்து 10ஆயிரம் கனஅடியாக குறைத்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
வழக்கமாக ஆடிப்பெருக்கு அன்று மேட்டூர் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். ஆனால் இந்த ஆண்டு தண்ணீர் இன்றி காணப்படுகிறது. இதனால் மேட்டூர் 16 கண் பாலம் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.