என் மலர்
உள்ளூர் செய்திகள்

அதிக வாக்கு எண்ணிக்கை உள்ள 34 'பூத்'களில் அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவு
- பல்வேறு ஆலோசனைகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடைபெற்றது.
- ஆலோசனைக் கூட்டத்தில் பொன்னேரி தேர்தல் துணை வட்டாட்சியர் கனகவல்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பொன்னேரி:
பாராளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துவருகிறது. இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள், ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பொன்னேரி தாலுகா அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் தலைமையில் நடைபெற்றது. வட்டாட்சியர் மதிவாணன் முன்னிலை வதித்தார்.
கூட்டத்தில், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட 311 வாக்குச்சாவடி மையங்களில் 34 பூத்துகளில் அதிக வாக்கு எண்ணிக்கை உள்ளதால் அங்கு போலீசாரை கூடுதலாக நியமிக்கவும், தேர்தலின் போது வாக்குச்சாவடி பணிகளை எவ்வாறு மேற்கொள்வது, கட்டிடங்கள் பாதுகாப்பு , அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து பாதுகாப்பு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடைபெற்றது.
அப்போது சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் கூறும்போது, அதிக வாக்குகள் உள்ள 34 பூத்துகளில் அதிகாரிகள் மற்றும் போலீசார் நேரில் சென்று ஆய்வு செய்து தேர்தலின் போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொன்னேரி தேர்தல் துணை வட்டாட்சியர் கனகவல்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.