search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளத்தின் படிகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
    X

    குளத்தின் படிகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

    • குடிநீராக ஊராட்சி நிர்வாகம் வீடுகளுக்கு குழாய் அமைத்து தந்தும் இந்த குளத்தின் நீரையே குடிக்க, சமைக்க மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
    • 4 ஆண்டுகளுக்கு முன்பு குளத்தின் ஒருபகுதி படிகள் சரிந்து விழுந்துள்ளது.

    திருத்தணி:

    திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், அத்திப்பட்டு ஊராட்சியில், 3 ஏக்கரில் அமைந்துள்ளது கொள்ளம்மா குளம். இந்த குளம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இந்த குளத்து நீரையே, சமையல் மற்றும் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.

    மாற்று குடிநீராக ஊராட்சி நிர்வாகம் வீடுகளுக்கு குழாய் அமைத்து தந்தும் இந்த குளத்தின் நீரையே குடிக்க, சமைக்க மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு குளத்தின் ஒருபகுதி படிகள் சரிந்து விழுந்துள்ளது. இதனை ஒன்றிய நிர்வாகம் சீரமைத்து தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×