search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருவள்ளூரை கஞ்சா இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை- போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
    X

    திருவள்ளூரை கஞ்சா இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை- போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

    • பழைய குற்றவாளிகள் மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • தொடர் கண்காணிப்பு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கை மூலம் திருவள்ளூர் மாவட்டத்தை கஞ்சா இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் நிருபர்களிடம் கூறியதாவது:-

    போதைப் பொருட்களை ஒழிக்க அனைத்து துறையினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளது குறித்து சோதனை மேற்கொண்டதில் 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 47 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடமிருந்து ரூபாய் 1,25,640 மதிப்புள்ள 184.660 கிலோ கிராம் குட்கா கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும் கடந்த 9 நாட்களில் 77.25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு கடத்தலில் ஈடுபட்டதாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 11 பேர் சிக்கி உள்ளனர்.

    பழைய குற்றவாளிகள் மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர் கண்காணிப்பு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கை மூலம் திருவள்ளூர் மாவட்டத்தை கஞ்சா இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×