என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
வங்கி முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து ரூ.20 ஆயிரம் திருட்டு
Byமாலை மலர்8 April 2023 4:46 PM IST
- மோட்டார் சைக்களில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம், வங்கி பாஸ்புக் மற்றும் காசோலையை மர்ம நபர்கள் திருடி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகாவில் அடங்கிய காட்டூர் பஜாரில் வசிப்பவர் நாகன் (வயது 68). இவர் வங்கியில் ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்து தனது மோட்டார் சைக்கிளில் வைத்தார். பின்னர் சிறிது தூரம் இருசக்கர வாகனத்தில் சென்று மற்றொரு வங்கிக்கு சென்று விட்டு திரும்பி வந்தார். அப்போது வெளியே நிறுத்தி இருந்த மோட்டார் சைக்களில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம், வங்கி பாஸ்புக் மற்றும் காசோலையை மர்ம நபர்கள் திருடி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து நாதன் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X