search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    792 தமிழ், ஆங்கில சொற்களை கூறி அசத்தல்- உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற 5 வயது சிறுவன்
    X

    மாணவன் கே.எம்.தக்ஷன்

    792 தமிழ், ஆங்கில சொற்களை கூறி அசத்தல்- உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற 5 வயது சிறுவன்

    • இந்த சாதனை மூலம் யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் புத்தகத்தில் ரெக்டி மோஸ்ட் டாப்பிக்ஸ் நேம் அன்டு ஆப்ஜக்ட்ஸ் என்ற பட்டியலில் இடம் பிடித்துள்ளான்.
    • இது தவிர கராத்தே மற்றும் ஸ்கேட்டிங்கும் பயன்று வருகிறான்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார சரவணன், விவசாயி. இவரது மனைவி மனோன்மணி, முதுகலை பட்டதாரி. இவர்களது 5 வயது மகன் கே.எம்.தக்ஷன்.

    இவன் வாலரை கேட்டில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறான்.

    இவன் தற்போது ஆங்கிலத்தில் 26 எழுத்துகளில் தலா 10-க்கும் மேற்பட்ட வார்த்தைகளையும் தமிழ் உயிர் எழுத்துகள் உயிர் மெய் எழுத்துகள் அடங்கிய 173 சொற்கள் 100 பழங்களின் பெயர்கள், 40 வாகனங்களின் பெயர்கள் 20 உடல் பாகங்கள் காய்கறிகள் 25, பழங்கள் 35, என சுமார் 800 வார்த்தைகளை கூறுகிறான்.

    இந்த சாதனை மூலம் யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் புத்தகத்தில் ரெக்டி மோஸ்ட் டாப்பிக்ஸ் நேம் அன்டு ஆப்ஜக்ட்ஸ் என்ற பட்டியலில் இடம் பிடித்துள்ளான். பியூட்சர்கலாம் புக் ஆப்சரிகார்டிலும் இவனது சாதனை பதிவு செய்யப்பட்டு சான்றுகள் , பதக்கங்கள், அங்கீகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இது தவிர கராத்தே மற்றும் ஸ்கேட்டிங்கும் பயன்று வருகிறான். இவனது சாதனை குறித்து தாயார் மனோன்மணி கூறியதாவது:-

    நாம் படிக்கும்போது எழுத்துக்களில் ஆங்கிலத்தில் ஏ என்றால் ஏ பார் ஆப்பிள், அண்ட் என 12 வார்த்தைகளை அறிந்து வைத்திருப்போம். ஆனால் எனது மகன் ஏ முதல் இசட் வரை உள்ள 26 எழுத்துகளிலும் 260 வார்த்தைகள் வாசிப்பான்.

    தமிழில் அ அம்மா என்பது போல எழுத்திற்கு 15 வார்த்தைகள் சொல்வான். 173 வார்த்தைகள் அவனுக்கு தெரியும். பழங்கள், பூச்சிகள், பறவைகள், காட்டு விலங்குகள், பெயர் தெரியும் கணக்கில், ஒன்று முதல் 100 வரை சொல்வான். அவனுக்கு ராக்கெட் விண்வெளி குறித்து தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டும் இவனை அவன் விரும்பும் துறையில் படிக்க வைப்போம்.

    சாதனை குறித்து செய்திகளை பார்த்த எனது மகன் தானும் இதேபோல் மெடல்கள் வாங்க வேண்டும் என கூறியதை அடுத்து அவனை நெறிப்படுத்தி வழிகாட்டுதல் செய்து மற்றவர்கள் சாதனையை முறியடித்து வந்தால் தான் இது போல் மெடல் வாங்க முடியும் என ஊக்குவித்து வழிகாட்டினோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×