என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![சர்வதேச பட்டம் விடும் திருவிழா நிறைவு - சுற்றுலாத்துறை அமைச்சர் பரிசுகள் வழங்கினார் சர்வதேச பட்டம் விடும் திருவிழா நிறைவு - சுற்றுலாத்துறை அமைச்சர் பரிசுகள் வழங்கினார்](https://media.maalaimalar.com/h-upload/2023/08/15/1932942-kite.webp)
X
சர்வதேச பட்டம் விடும் திருவிழா நிறைவு - சுற்றுலாத்துறை அமைச்சர் பரிசுகள் வழங்கினார்
By
மாலை மலர்16 Aug 2023 3:19 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சர்வதேச பட்டம் விடும் திருவிழா 4 நாட்கள் நடைபெற்றது.
- கடைசி நாளான நேற்று மக்கள் குவிந்ததால் இசிஆரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், குளோபல் மீடியா பாக்ஸ் தனியார் நிறுவனமும் இணைந்து 4 நாட்கள் நடத்திய சர்வதேச பட்டம் விடும் திருவிழா நேற்று இரவுடன் நிறைவடைந்தது.
கடைசி நாளான நேற்று ஏராளமான மக்கள் குவிந்ததால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம், தாய்லாந்து, உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் தமிழகம், குஜராத், ஒடிசா, பஞ்சாப், கோவா பகுதிகளில் இருந்து வந்திருந்த பட்டம் விடும் கலைஞர்களுக்கு, சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மாமல்லபுரம் கடற்கரை கோவில் சிலையை பரிசாக வழங்கி பாராட்டினார்.
சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்
Next Story
×
X