என் மலர்
உள்ளூர் செய்திகள்
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது
- ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரத்து 500 கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்கப்பட்டது.
- போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாரைச் சேர்ந்த விஜய் என்பவரின் மனைவி நாகலெட்சுமி என்பவர் பட்டா பெயர் மாற்றம் கேட்டு பொறையாறு கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்.
அதனை பரிந்துரை செய்ய பொறையாரில் (பொறுப்பு) கிராம நிர்வாக அலுவலராக செயல்பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜன் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து விஜய் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் அளித்தார்.
இதைத் தொடர்ந்து போலீசார் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவியரூ.2500 விஜய், கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜன் கொடுத்தார்.
அந்த பணத்தை பாண்டியராஜன் பெற்றபோது மயிலாடுதுறை லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி மனோகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அருள் பிரியா மற்றும் போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்த பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இச்சம்பவம் பொறையார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.