என் மலர்
உள்ளூர் செய்திகள்

தலையில் பலத்த காயங்களுடன் விவசாயி சாவு
- சாலக்கடை பகுதிக்கு சென்று விட்டு வருவதாக வீட்டில் கூறி சென்றார்.
- உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா கரியாபட்டிணம் காவல்சரகம் தலைக்காடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாஜலம் (வயது 50) விவசாய கூலி தொழிலாளி.
இவர் நேற்று அருகில் உள்ள சாலக்கடை பகுதிக்கு சென்று விட்டு வருவதாக வீட்டில் கூறி சென்றார்.
பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. இதைத் தொடர்ந்து உறவினர்கள் வெங்கடாசலத்தை தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை சாலக்கடை பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் வெங்கடாஜலம் இறந்து கிடந்தார்.
இது குறித்து பொது மக்கள் கரியாபட்டினம் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகவேல் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கன்னிகா, ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெங்கடாஜலத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கரியாபட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையா? கொலை நடந்தது எப்படி என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.